Akananuru 1
வண்டுபடத் ததைந்த கண்ணி, ஒண்கழல், உருவக் குதிரை மழவர் ஓட்டிய முருகன் நற்போர் நெடுவேள் ஆவி, அறுகோட்டு யானைப் பொதினி யாங்கண், சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய கல்போற் பிரியலம் என்ற சொல்தாம் மறந்தனர் கொல்லோ - தோழி!-சிறந்த வேய்மருள் பணைத்தோள் நெகிழச் சேய் நாட்டுப் பொலங்கல வெறுக்கை தருமார்-நிலம்பக அழல்போல் வெங்கதிர் பைதறத் தெறுதலின், நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு, அறுநீர்ப் பைஞ்சுனை ஆமறப் புலர்தலின்
உகுநெல் பொரியும் வெம்மைய; யாவரும் வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய சுரம்புல் லென்ற ஆற்ற; அலங்கு சினை நாரில் முருங்கை நவிரல் வான்பூச் சூரலம் கடுவளி எடுப்ப, ஆருற்று, உடைதிரைப் பிதிர்வின் பொங்கி, முன் கடல்போல் தோன்றல - காடு இறந்தோரோ?
அகநானூறு · Original Tamil: Project Madurai. No modern translation reproduced. · Source & license